செல்வி பவதாரணி வயது 23 மதுரை ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அம்மா திருமதி.மோகனவல்லி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மகன் ஸ்ரீராம் MSc முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கணவனின் துணை இல்லாமல் திருமதி மோகனவல்லி அவர்களே குடும்பத்தை வழி நடத்தி வந்தார். செல்வி பவதாரணி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு கர்ப்பப்பை மற்றும் சினைப்பை இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நோயின் தாக்கத்தினால் மற்ற உறுப்புகளுக்கும் கேன்சர் வியாதி பரவத் தொடங்கியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையுடன் "ஹீமோதெரபி சிகிச்சை" அளிக்கப்பட உள்ளது. பவதாரணியின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா நமது ஐஸ்வர்யம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்கள். அவரது வேண்டுகோளை ஏற்று பவதாரணியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 50000 வசூல் செய்யப்பட்டு 19/09/2024 அன்று பவதாரணியின் அம்மாவிடம் காசோலையாக வழங்கப்பட்டது. இதற்கு பெரிதும் உதவியாக இருந்த சுவடுகள் அமைப்பு(அபிராமம் முஸ்லிம் பள்ளியின் பழைய மாணவர்கள் 1996-2002 ), மருத்துவர் பபிதா அவர்கள் மற்றும் வண்ணமலர்கள் பவுண்டேஷன் ஆகியோருக்கு ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு 7540050088
Ms. Bhavatharani, aged 23, is in her final year of study at the Madurai Homeopathy Medical College. Her mother, Mrs. Mohanavalli, worked for a private company. Her brother, Sriram, is currently pursuing his first year of MSc. Without her husband's support, Mrs. Mohanavalli has been the sole provider for the family.
A year ago, Bhavatharani was diagnosed with cancer, which required the surgical removal of both her uterus and breasts. Unfortunately, the disease has now spread to other organs. Following the doctors' advice, she is set to receive chemotherapy treatment.
To cover Bhavatharani’s medical expenses, her mother approached our Aishwaryam Trust for assistance. Responding to her request, a sum of ₹50,000 was raised and handed over as a cheque to Bhavatharani's mother on 19th September 2024.
Aishwaryam Trust expresses heartfelt thanks to the Suvadugal Organization (Alumni of Abirami Muslim School, 1996-2002), Dr. Babitha, and Vannamalar Foundation for their significant contributions.
For further information, contact: 7540050088.